• Sun. Sep 24th, 2023

விக்னேஷ் சிவன் – நயன்தாரா கேரளா கோவிலில் சிறப்பு தரிசனம்

Feb 18, 2022

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் மாசி மக திருவிழா நடந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்குள் செல்ல 700 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவராக நடிகை நயன்தாராவும் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் காதலர் விக்னேஷ் சிவனும் இருந்தார்.

இருவரும் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தனர்.

இதை அறிந்ததும் அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

கோவிலுக்கு காதலருடன் வந்தது பற்றி நிருபர்கள் கேட்ட போது பதில் அளிக்க மறுத்த நடிகை நயன்தாரா அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.