• Thu. Apr 18th, 2024

விஜய் 67 – வெளியான தகவல்!

Nov 13, 2021

ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை முடிவு செய்வதை பல வருடங்களாக ஒரு கொள்கை போல் செயல்படுத்தி வருகிறார் இளையதளபதி விஜய்.

இரண்டு படங்களுக்கு நடுவில் அதிகபட்சம் ஒன்றோ இரண்டோ வாரங்கள் மட்டும் இடைவெளி விடுவார். சில நேரம் அதுவும் இருக்காது.

இந்நிலையில் தற்போது தனது 65 வது படமான பீஸ்டில் விஜய் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்துக்குப் பிறகு வம்சி பைதிபள்ளி விஜய்யின் 66 வது படத்தை இயக்குகிறார்.

விஜய்யின் 67 வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி இருந்து வந்தது. உள்வட்டாரங்களில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் சுவாரஸியமானவை.

விஜய்யின் 64 வது படமான மாஸ்டரை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 வது படத்தை இயக்கலாம் என்கிறார்கள்.

இந்தப் படத்தை தாணு தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது. விஜய்யின் பிளாக் பஸ்டர் ஹிட்டான துப்பாக்கி படத்தை தாணு தயாரித்திருந்தார். ஒரு படத்தின் விளம்பரத்துக்கு அவர் எப்படி மெனக்கெடுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா முதல் அலைக்குப் பின் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது இவரது மாஸ்டர் திரைப்படம்தான்.

படம் எதிர்பார்த்ததைவிட அதிகம் வசூலித்தது. விஜய் – லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்தால் இன்னொரு ஹிட் நிச்சயம். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை.