• Fri. Dec 6th, 2024

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்

Feb 26, 2022

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபின், நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.