• Wed. Oct 30th, 2024

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் சூர்யாவிற்கு பதிலாக விஜய்சேதுபதி

Sep 2, 2021

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சூர்யாவுக்கு பதிலாக விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஸ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ரெயின் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கினார்கள்.

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் இதில் சூர்யா ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த நிறுவனத்தில் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இருப்பதாகவும் அந்த படத்தின் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக தமன்னா அல்லது சமந்தா நாயகியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.