• Tue. Mar 26th, 2024

விஜய் தேவர்கொண்டா படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர்

Sep 28, 2021

விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் படத்தில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், நடிக்கிறார்.

அர்ஜூன் ரெட்டி, டியர் காம்ரேட் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

இவர் தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் லைகர் படத்தில நடித்து வருகிறார். இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்துக்கு மணிசர்மா பின்னணி இசையமைக்க, தனிஷ்க் பக்சி பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் படத்தில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்துள்ளதாக படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதவில், குத்துச்சண்டை விளையாட்டின் கடவுள், சிறந்தவர் மைக் டைசன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அதுவும் இந்தியாவிலேயே முதன்முறையாக லைகர் படத்தில் இணைந்துள்ளார் என விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார்.