இலங்கையில் நேற்று 2,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 339,084 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மேலும் 118 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 5,340 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.