• Mon. Nov 4th, 2024

கொரோனா குறித்த செய்தி சேகரிக்க சென்ற சீன நாட்டவர் மரணப்படுக்கையில்

Nov 5, 2021

கொரோனா குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவர் மரண படுக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரண படுக்கையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவருக்கு முழு அளவில் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதாக கூறப்படுகிறது உண்மை என்றே தெரியவருகிறது. இதனால் சீன மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.