• Tue. Sep 10th, 2024

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 6,162 பேருக்கு கொரோனா!

Jun 24, 2021

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடுதிரும்பியுள்ளனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த 26 வயது இளைஞர் உள்பட மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 155 பேர் பலியானதாக மக்கள் நல்வாழ்த்துறை அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 49,845 ஆக சரிவடைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 756 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் 372 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியானது. ஈரோடு மாவட்டத்தில் 641 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் இன்று 386 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் இரட்டை இலக்கங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.