• Fri. Dec 6th, 2024

இலங்கையில் மேலும் 398 பேருக்கு கொரோனா

Dec 27, 2021

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 83 ஆயிரத்து 649ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 59 ஆயிரத்து 436 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 9 ஆயிரத்து 329 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.