• Sun. Feb 9th, 2025

இலங்கையில் கொரோனா நிலவரம்

Dec 16, 2021

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 966 அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 46 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.