• Sun. Sep 24th, 2023

இலங்கையின் கொரோனா நிலவரம்

Dec 24, 2021

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 82 ஆயிரத்து 149ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 790 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது.