• Mon. Dec 2nd, 2024

கொவிட் – 19 மாத்திரைக்கு அமெரிக்கா ஒப்புதல்!

Dec 24, 2021

பைசர் நிறுவனத்தின் கொவிட் – 19 மாத்திரையின் பயன்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்நாட்டில் ஒப்புதல் பெற்றுள்ள முதல் மாத்திரை இதுவாகும்.

அந்த முடிவைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் மாத்திரை, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் மரணங்களையும் குறைக்க உதவும் என்றார்.

மாத்திரைகள் சமமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய தமது நிர்வாகம் மாநில அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் என்று அவர் உறுதியளித்தார்.