• Mon. Sep 9th, 2024

இந்தியாவில் குறைவடைந்த கொரோனா பாதிப்பு

Mar 20, 2022

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.

கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,07,841 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,16,479 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,65,122 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 26,240 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.