• Thu. Apr 18th, 2024

உலகளவில் கொரோனா பாதிப்பு 22.78 கோடி!

Sep 17, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.78 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 227,800,684 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,683,348 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 204,445,527 பேர் மீண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் 18,671,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.