• Sat. Oct 12th, 2024

இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Jan 8, 2022

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் மேலும் 16 பேர் நேற்று(07) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,557 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 590,063 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.