இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் நேற்று(09) ஒரேநாளில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 61 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 12 ஆயிரத்து 816 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 76 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும், நேற்று புதிதாக 12 ஆயிரத்து 331 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.