• Thu. Apr 25th, 2024

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Jan 17, 2022

இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில், ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் 85 விதமானவை ஓமிக்ரோன் தொற்றாளர்கள் என்பது உறுதி செய்யப்ட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு, காலி, மாத்தறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை மாவட்டங்களில் அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

´கொரோனா ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ்´ தொற்றாளர்கள் இருக்கலாமென்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

182 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 162 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார வழிமுறைகளை முறையாகப் கடைப்பிடிக்குமிடத்து இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். கொழும்பு, காலி, மாத்தறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.