ஜேர்மனியில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ள நிலையில் அந்நாடு Pfizer கோவிட் மாத்திரைகளை வாங்கியுள்ளது.
ஜேர்மனி நாட்டின் சுகாதார அதிகாரிகள், நேற்றைய நிலவரப்படி மொத்தம் 10,443 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, இது முந்தைய நாளை விட 43% உயர்வு என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
இதற்கு மத்தியில் கோவிட்-19 சிகிச்சைக்காக Pfizer Incன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மாத்திரைகள் அடங்கிய 1 மில்லியன் பொதிகளை ஜேர்மனி வாங்குகிறது. இந்த மருந்துகள் அடுத்தாண்டு ஜனவரி முதல் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனி 80 சதவீதம் தடுப்பூசி பெறவேண்டும் என்ற இலக்கை அடையத் தவறியுள்ள நிலையில் அந்த மைல்கல்லை ஜனவரி இறுதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தற்போது நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.