• Mon. Mar 25th, 2024

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் ஆரம்பம்

Oct 23, 2021

தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இரவு 7 மணி வரை நடக்கும் முகாமில் செலுத்துவதற்காக 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.