தமிழகத்திலும் ஒமிக்ரோன் வைரஸ் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 8 பேரில் ஒரு குழந்தை தவிர மற்ற ஏழு பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.