• Fri. Feb 7th, 2025

தமிழகத்தில் 12 பேருக்கு ஒமிக்ரான்!

Dec 17, 2021

தமிழகத்தில் 12 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் ஒமிக்ரான் பாதிப்பு உடைய ஒருவர் கண்டறிய பட்டார் என்பதும் அதனை அடுத்து அவருடன் தொடர்புடைய சிலருக்கு பரிசோதனை செய்ததில் அதில் 12 பேருக்கு ஒமிக்ரான் முந்தைய அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த 12 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர் சென்ற இடங்களில் உள்ளவர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.