• Thu. Apr 24th, 2025

கோவா மாநிலத்திற்கு வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான்

Dec 28, 2021

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து கோவா மாநிலத்திற்கு வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.