ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகின்ற நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு பிரான்ஸ் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் பிரெஞ்சு பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.
இந்த பயணக் கட்டுப்பாடுகள் தொற்றுநோய்களின் அலைகளைத் தடுக்க கொண்டுவரப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என பிரெஞ்சு பிரதமர் கூறியுள்ளார்.
ஒமிக்ரோன் மாறுபாட்டு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெள்ளிக்கிழமை முதல் ஜேர்மனி, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்கள் ஒமிக்ரோன் அலையைத் தடுக்கும் முயற்சியில் மேலதிக கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.