• Tue. Nov 5th, 2024

இந்தியாவில் சாதனை – 100 கோடியை நெருங்கிய தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை!

Oct 15, 2021

இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்களை வைரஸில் இருந்து காப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை சுகாதாரத் துறை அலுவலக அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் 97 கோடிப் பேர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 130 கோடி என்ற நிலையில் சுமார் 70% மக்களுக்கு கொரனோ வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது. எனவே இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.