• Sat. Dec 3rd, 2022

இலங்கையில் 67% பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானம்

Sep 21, 2021

இலங்கையின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கவும் தேவையான தடுப்பூசிகளை வாங்கவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 37 இலட்சத்து 49 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கோடியே 10 இலட்சத்து 54 ஆயிரத்து 101 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.