• Sun. Dec 8th, 2024

தமிழகத்தில் பள்ளிகளை கல்லூரிகளை மூட வேண்டும்

Dec 27, 2021

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருவது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளி கல்லூரிகள் தற்போது திறந்திருப்பதால் மாணவர்களுக்கு ஒமிக்ரான் பரவிவிடக்கூடாது என்பதற்காக அவர்களை உடனடியாக மூட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படும் போது பள்ளி கல்லூரிகள் குறித்த அறிவிப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.