• Fri. Jul 26th, 2024

75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி

Mar 22, 2022

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கான நான்காவது கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முன்பதிவை இன்று துவங்கியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான சுயாதீன கூட்டுக் குழு(JCVI) அறிவுறுத்தி உள்ளது.

ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி முதியோர் மற்றும் மிகவும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் கொரோனாவால் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் சாஜித் ஜாவிட் கூறினார்.