• Wed. Dec 4th, 2024

முககவசம் கட்டாயமல்ல – பிரதமர் போரிஸ் ஜான்சன்

Jan 21, 2022

இங்கிலாந்தில் கடந்த மாத இறுதியில் இருந்து ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்தது. இதன் காரணமாக கொரோனா அதிகரித்து வந்ததால், ஒமைக்ரானுக்கு எதிராக ‘திட்டம்-பி’-யை அரசு செயல்படுத்தியது.

இதன்படி முககவசம் கட்டாயம், வீட்டில் இருந்து வேலை, ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் மூடல் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் தற்போது அங்கு தொற்று எண்ணிக்கை சரியத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அடுத்த வாரம், அதாவது வருகிற 26-ந்தேதியுடன் ‘திட்டம்-பி’-யை பிரித்தானிய அரசு கைவிடுகிறது.

அந்தவகையில், 27-ந்தேதி முதல் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் உயர்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு நேற்று முதலே முககவசம் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல வீட்டில் இருந்து பணி செய்வது ரத்து செய்யப்படுகிறது. ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் நுழைய தடுப்பூசி சான்றிதழோ அல்லது கொரோனா இல்லை என்ற சான்றிதழோ கட்டாயம் அல்ல என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.

அதேநேரம் தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர்.