தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மளமளவென குறைந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது.
தொற்று பாதிப்பு வேகமாக குறைவது மக்களை சற்று நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15 ஆம் தேதியுடன் முடிய உள்ளன.
இதனால், கூடுதல் தளர்வுகள் விதிப்பது தொடர்பாக வரும் 14 ஆம் தேதி, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என பெற்றோர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவலை பின்பற்றி கூடுதல் தளர்வுகளை அரசு அறிவிக்கும் என்றே தெரிகிறது.