• Thu. Oct 31st, 2024

இலங்கையில் 21ம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிக்கப்படுமா?

Oct 19, 2021

தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை 21ம் திகதிக்கு பின்னரும் நீடிக்குமா? நீக்கப்படுமா? என்பதை ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின் அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கூறினார்.

பதுளை பொது மருத்துவமனைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலைமையில் சுகாதார அமைச்சு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படாமல் இருப்பார்களானால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.