• Mon. Dec 11th, 2023

விஜய் தொலைக்காட்சியில் பிரியங்காவிற்கு பதிலாக இனி இவர்தான்… களமிறங்கும் பிரபலம்!

Sep 17, 2021

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கொரோனா காலத்தில் சிறியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது, நோய் தொற்று பிரச்சனையால் அப்படியே நிறுத்தப்பட்டது.

தற்போது பெரியவர்களுக்கான புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, அதுவும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

இந்த சீசனில் ஜெயிக்கப்போவது யார் என்ற கருத்துக் கணிப்புகளும் நிறைய நடந்து வருகிறது.

இந்த நிலையில் தான் பிக்பாஸ் 5வது சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கலந்துகொள்கிறார் என செய்தி வந்தது.

அதனை உறுதிப்படுத்துவது போல் புதிய Start Music நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்குகிறார்.

இப்போது இதற்கு மேல் வரப்போகும் சில சூப்பர் சிங்கர் எபிசோடுகளை குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்க இருக்கிறாராம்.

அதோடு ஷிவாங்கி அதன் ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.