• Thu. Dec 7th, 2023

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 13

Aug 13, 2021

ஆகத்து 13 கிரிகோரியன் ஆண்டின் 225 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 226 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 140 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 29 – உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான்.

523 – ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

582 – பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார்.

1099 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

1516 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1521 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான படையினர் அஸ்டெக் தலைநகரைக் கைப்பற்றினர்.

1532 – பிரிட்டனி தன்னாட்சிப் பிரதேசம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது.

1536 – சப்பானில் கியோத்தோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் அங்குள்ள 21 நிச்சிரன் பௌத்த கோயில்களைத் தீக்கிரையாக்கினர்.

1645 – சுவீடனும் நோர்வேயும் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.

1704 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய மற்றும் உரோமைப் படையினர் பிரெஞ்சுப் படையினரை பிளெனைம் சமரில் வென்றனர்.

1792 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரி என அறிவிக்கப்பட்டார்.

1806 – செர்பியப் புரட்சி: உதுமானியர்களுக்கு எதிரான மிசார் சமர் ஆரம்பமானது. இரண்டு நாட்களில் செர்பியா வெற்றி பெற்றது.

1814 – ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையில் இலண்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி நெப்போலியப் போர்களுக்கு முன்னதாக இருந்த இடச்சுக் குடியேற்றங்கள் அவர்களுக்கே திரும்பத் தரப்பட்டன.

1849 – யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.

1868 – பெருவின் தெற்கே அரிக்கா என்ற இடத்தில் 8.5–9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 25,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனை அடுத்து நிகழ்ந்த ஆழிப்பேரலையினால் அவாய், நியூசிலாந்து வரை சேதங்கள் ஏற்பட்டன.

1889 – நாணயங்கள் மூலம் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தும் கருவி வில்லியம் கிரே என்பவரால் அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: எசுப்பானிய அமெரிக்கப் படைகள் மணிலாவில் போரில் ஈடுபட்டன. நகரைப் பிலிப்பீனியக் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்க விடாமல், எசுப்பானியத் தளபதி அமெரிக்காவிடம் சரணடைந்தார்.

1898 – 433 ஈரோசு என்ற முதலாவது புவியருகு சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1905 – சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.

1913 – ஹரி பிறியர்லி என்ற ஆங்கிலேயர் துருவேறா எஃகைக் கண்டுபிடித்தார்.

1918 – அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் முதல்தடவையாகப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1920 – போலந்து–சோவியத் போர் வார்சாவாவில் ஆரம்பமாயிற்று. ஆகத்து 25 இல் முடிவடைந்த இப்போரில் சோவியத் செஞ்சேனை தோற்றது.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சாங்காய் சமர் ஆரம்பமானது.

1954 – பாக்கித்தான் வானொலி பாக்கித்தான் நாட்டுப்பண்ணை முதல் தடவையாக ஒலிபரப்பியது.

1960 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1961 – பனிப்போர்: கிழக்கு செருமனி தனது குடிமக்கள் தப்பிச் செல்லாதவாறு பெர்லினின் கிழக்கு, மேற்கு எல்லையை மூடி பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.

1964 – ஐக்கிய இராச்சியத்தில் கடைசித் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1968 – கிரேக்க அரசுத்தலைவர் கியார்கியசு பப்படப்பவுலசு மீது ஏதன்சு நகரில் கொலைமுயற்சி இடம்பெற்றது.

1969 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அரசியல், மதக் கலவரங்களை அடக்க பிரித்தானியப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

1969 – அப்பல்லோ 11 விண்வெளிவீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தார்கள்.[3]

1978 – லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

2004 – 156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

2004 – 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்சில் ஆரம்பமாயின.

2006 – புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் 18 பேர் கொல்லப்பட்டனர், 54 பேர் காயமடைந்தனர்.

2008 – உருசியப் படைகள் சியார்சியாவின் கோரி நகரைக் கைப்பற்றின.

2010 – 380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் என மொத்தம் 492 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தை வந்தடைந்தது.

2015 – பகுதாது நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர், 212 பேர் காயமடைந்தனர்.