• Sun. Dec 1st, 2024

வரலாற்றில் இன்று பெப்ரவரி 11

Feb 11, 2022

பெப்ரவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 42 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில் 324) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்
கிமு 660 – யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள்.

55 – உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது.

244 – சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார்.

1534 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.

1626 – எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார்.

1640 – இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.

1659 – கோபனாவன் மீது சுவீடன் படைகள் நடத்திய தாக்குதல் பெரும் இழப்புடன் முறியடிக்கப்பட்டது.

1790 – அடிமை முறையை ஒழிக்குமாறு நண்பர்களின் சமய சமூகம் அமெரிக்கக் காங்கிரசில் முறையிட்டது.

1794 – அமெரிக்க மேலவையின் முதலாவது அமர்வு பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

1802 – சின்ன மருது மகன் துரைச்சாமி உட்பட 73 பேர் மலாயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்.

1823 – மால்டாவில் வல்லெட்டா நகரில் கிறித்தவக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட விழா நெரிசலில் 110 மாணவர்கள் உயிரிழந்தனர்.

1826 – இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

1855 – காசா ஐலு எத்தியோப்பியாவின் பேரரசராக மூன்றாம் தெவோதிரசு என்ற பெயரில் முடிசூடினார்.

1856 – அவத் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது. அவத் மன்னர் வாஜித் அலி சா கைது செய்யப்பட்டு பின்னர் கொல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.

1858 – பெர்னதெத் சுபீரு லூர்து அன்னையை முதற்தடவையாகக் கண்ணுற்ற நிகழ்வு பிரான்சின் லூர்து நகரில் இடம்பெற்றது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமைகள் விவகாரத்தில் எந்தவொரு மாநிலத்திலும் நேரடியாகத் தலையிடுவதில்லை என அமெரிக்கக் கீழவை ஏகமனதாக முடிவு செய்தது.

1873 – எசுப்பானிய மன்னர் முதலாம் அமேதியோ முடி துறந்தார்.

1929 – வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான உடன்பாட்டை இத்தாலியும் திரு ஆட்சிப்பீடமும் எட்டின.

1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

1938 – பிபிசி தொலைக்காட்சி தனது முதலாவது அறிபுனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஐரோப்பாவில் நேச நாடுகளின் இராணுவத்திற்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1953 – சோவியத் ஒன்றியம் இசுரேல் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது.

1959 – தெற்கு அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு (பின்னர் தெற்கு யேமன்) ஐக்கிய இராச்சியத்தின் காப்பு நாடாக உருவாக்கப்பட்டது.

1960 – சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1964 – கிரேக்கரும் துருக்கியரும் சைப்பிரசின் லிமாசோல் நகரில் போரிட்டனர்.

1971 – பனிப்போர்: பன்னாட்டுக் கடற்பரப்பில் அணுக்கரு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன.

1973 – வியட்நாம் போர்: வியட்நாமில் இருந்து முதல் தொகுதி அமெரிக்கப் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

1978 – அரிசுட்டாட்டில், வில்லியம் சேக்சுபியர், சார்லஸ் டிக்கின்ஸ் ஆகியோரின் ஆக்கங்களுக்கான தடையை சீனா தளர்த்தியது.

1979 – அயத்தொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானியப் புரட்சி வெற்றி பெற்றது.

1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா கேப் டவுன் விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றார்.

1996 – குமாரபுரம் படுகொலைகள்: இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

1997 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்க்கும் டிஸ்கவரி விண்ணோடம் புறப்பட்டது.

1999 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தை தாண்டிச் சென்றது. இவ்வாறான நிகழ்வு மீண்டும் 228 ஆண்டுகளின் பின்னரே நிகழும் என எதிர்வு கூறப்படுகிறது.

2008 – கிழக்குத் திமோர் கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலில் அரசுத்தலைவர் ஒசே ரமோசு-ஓர்ட்டா படுகாயமடைந்தார். கிளர்ச்சித் தலைவர் அல்பிரடோ ரெய்னார்டோ கொல்லப்பட்டார்.

2011 – அரேபிய வசந்தம்: ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக் கோரி எகிப்தியப் புரட்சி ஆரம்பமானது.

2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மூப்பு காரணமாக 2013 பெப்ரவரி 28 இல் பணி துறப்பார் என வத்திக்கான் அறிவித்தது.

2014 – அல்சீரியாவின் கிழக்கே சரக்கு விமானம் ஒன்று மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

2017 – வட கொரியா யப்பான் கடல் மேலாக ஏவுகணையை ஏவிப் பரிசோதித்தது.

2018 – சரதோவ் எயர்லைன்சு விமானம் 703 மாஸ்கோ அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 71 பேரும் உயிரிழந்தனர்.