• Sat. Apr 20th, 2024

வரலாற்றில் இன்று ஜனவரி 12

Jan 12, 2022

ஜனவரி 12 கிரிகோரியன் ஆண்டின் 12 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 353 (நெட்டாண்டுகளில் 354) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1528 – முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார்.

1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார்.

1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது.

1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.

1866 – கொழும்பு மாநகரசபைக்கு முதல்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.

1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

1872 – நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.

1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

1915 – அமெரிக்க காங்கிரசு பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

1918 – இங்கிலாந்து, இசுட்டாஃபர்ட்சயர் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 155 பேர் உயிரிழந்தனர்.

1918 – பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது உருசியா குண்டுகளை வீசியது.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.

1964 – சான்சிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.

1967 – எம். ஆர். ராதா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.

1970 – நைசீரிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1976 – பலத்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.

1990 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சிறுபான்மையின ஆர்மீனியர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர், ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

1991 – பாரசீக வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்கை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்க காங்கிரசு ஒப்புதல் அளித்தது.

1992 – மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

1998 – 19 ஐரோப்பிய நாடுகள் மாந்தர் படியாக்கம் தடை செய்யப்பட்டது.

2004 – உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலான “குயீன் மேரி 2” தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.

2005 – புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.

2006 – சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.

2006 – 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை அருள் சின்னப்பரைச் சுட்டுக் காயப்படுத்திய மெகுமேது அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

2010 – எயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100,000 பேர் வரை உயிரிழந்தனர். தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் பெரும் பகுதி அழிந்தது.

2015 – கமரூன், கொலபாட்டா நகரில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 143 போகோ அராம் போராளிகள் கொல்லப்பட்டனர்.