• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 12

Jun 12, 2021

சூன் 12 கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.

1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.

1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது.

1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர்.

1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சாமுவேல் ஆடம்ஸ், யோன் ஆன்கொக் ஆகியோருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை.

1817 – ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது.

1830 – 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.

1898 – பிலிப்பீன்சு எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதாக எமிலியோ அகுயினால்டோ அறிவித்தார்.

1899 – ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர்.

1902 – ஆத்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

1914 – உதுமானியப் பேரரசில் துருக்கியர்கள் 50 முதல் 100 கிரேக்கர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோரை இனக்கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர்.

1934 – பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.

1935 – பொலிவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் நாட்சி செருமனியின் இராணுவத் தளபதி இர்வின் ரோமெல்லிடம் சரணடைந்தனர்.

1942 – ஆன் பிராங்க் தனது 13-வது அகவையில் ஒரு நாட்குறிப்பைப் பெற்றார்.

1943 – பெரும் இன அழிப்பு: செருமனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை: அமெரிக்க வான்குடைப் பதாதிகள் பிரான்சின் கேரன்டான் நகரைக் கைப்பற்றினர்.

1954 – தனது 14-வது அகவையில் இறந்த தோமினிக் சாவியோவை திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு புனிதராக அறிவித்தார்.

1964 – இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.

1967 – கலப்பினத் திருமணங்களைத் தடை செய்யும் அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1967 – சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1987 – மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது..

1990 – உருசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருசியாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.

1991 – உருசியாவில் முதற்தடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசுத்தலைவர் பதவியேற்றார்.

1991 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1993 – நைஜீரியாவில் தேர்தல் இடம்பெற்றது. ஆனால் இது பின்னர் இராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது.

1999 – நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.

2003 – “தமிழர் விடுதலை இயக்கம்” என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

2006 – காசுமீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.

2016 – அமெரிக்காவில் ஒர்லாண்டோவில் ஓரினச் சேர்க்கையாளரின் இரவுக் கூடலகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், 58 பேர் காயமடைந்தனர்.

2017 – வட கொரியாவில் 17 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் ஆழ்மயக்கத்தில் நாடு திரும்பிய அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.