• Fri. Dec 8th, 2023

வரலாற்றில் இன்று ஜூன் 29

Jun 29, 2021

சூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார்.

1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார்.

1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.

1659 – கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன.

1786 – ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.

1807 – உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி சென்யாவின் தலைமையிலான உருசியக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது.

1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.[1]

1864 – கனடா, கியூபெக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.

1880 – பிரான்சு தாகித்தியைக் கைப்பற்றியது.

1888 – ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.

1895 – சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.

1900 – நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் “நோபல் அறக்கட்டளை” ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.

1914 – சைபீரியாவில் கிரிகோரி ரஸ்புடின் மீது கொலை முயற்சி நடந்தது.

1950 – கொரியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கொரியா மீது கடல் மார்க்கத் தடையை ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்தார்.

1975 – ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் I கணினியை சோதித்தார்.

1976 – சீசெல்சு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1995 – அட்லாண்டிசு விண்ணோடம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் முதல் தடவையாக இணைந்தது.

1995 – தென் கொரியாவின் சியோல் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் உயிரிழந்தனர், 937 பேர் காயமடைந்தனர்.

2002 – தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற கடற்படைச் சமரில், ஆறு தென்கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர், வட கொரியப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.

2006 – குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் கைதிகளை இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்ய அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் எடுத்த முடிவை ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்தது.

2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.

2012 – அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய நீள்சுழற்காற்றினால் 22 பேர் உயிரிழந்தனர்.

2014 – இசுலாமிய அரசு சிரியாவிலும் வடக்கு ஈராக்கிலும் தமது கலீபகத்தை நிறுவினர்.

2014 – நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறித்தவக் கோவில்களை இசுலாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.

2015 – சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஆரம்பிக்கப்பட்டது.