• Fri. Jul 1st, 2022

வரலாற்றில் இன்று நவம்பர் 15

Nov 15, 2021

நவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 319 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் ஷேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.

1889 – பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.

1926 – என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.

1941 – நாசி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதை முகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.

1943 – நாசி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதை முகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

1966 – ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1969 – வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.

1970 – சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.

1971 – இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.

1978 – டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.

1983 – வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.

1988 – சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.

1988 – பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.

1990 – அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

2002 – ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

2007 – வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.