• Fri. Apr 19th, 2024

வரலாற்றில் இன்று நவம்பர் 19

Nov 19, 2021

நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.

1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1862 – இலங்கை, காலியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற கொழும்பு என்ற பயணிகள் கப்பல் மாலைதீவுகளுக்கு அருகே மினிக்காய் தீவில் மூழ்கியது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கெட்டிசுபெர்க்கு உரையை நிகழ்த்தினார்.

1881 – உக்ரேனில் ஒடெசா நகரில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.

1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பிய இராணுவம் பித்தோலா நகரைக் கைப்பற்றியதன் மூலம், மாக்கடோனியாவில் ஐந்து நூற்றாண்டு கால உதுமானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.

1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி, கோர்மொரன் ஆகிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆத்திரேலியக் கடற்படையினரும் 77 நாட்சி ஜெர்மனியக் கடற்படையினரும் உயிரிழந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை: சோவியத் படையினர் வோல்கோகிராட் நகர் மீது மீள்தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.

1943 – பெரும் இன அழிப்பு: நாட்சிகள் மேற்கு உக்ரைனில் லிவீவ் நகரில் இருந்த யானொவ்சுக்கா வதை முகாமை முழுமையாக அழித்தனர். குறைந்தது 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1946 – ஆப்கானித்தான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.

1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ல்சு கொன்ராட், ஆலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர் என்ற பெயரினைப் பெற்றனர்.

1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது இலக்கைப் பெற்றார்.

1977 – போர்த்துகல் போயிங் விமானம் ஒன்று மதீராவில் விபத்துக்குள்ளாகியதில் 131 பேர் உயிரிழந்தனர்.

1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் உயிரிழந்தனர்.

1985 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.

1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.

1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.

2002 – கிரேக்க எண்ணெய்த் தாங்கிக் கப்பல் பிரெஸ்டிச் கலீசியா அருகே இரண்டாகப் பிளந்ததில், 76,000 கனமீ எண்ணெய் கசிந்தது.

2010 – நியூசிலாந்தில் பைக் ஆற்றுச் சுரங்கத்தில் நான்கு வெடிப்புகள் நிகழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.

2013 – பெய்ரூத்தில் ஈரானியத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.