• Tue. Nov 30th, 2021

வரலாற்றில் இன்று நவம்பர் 25

Nov 25, 2021

நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர்.

1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான்.

1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான்.

1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன.

1510 – போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், உள்ளூர் கூலிப்படையினரின் உதவியிலும், கோவாவை பிஜப்பூர் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றியது. 451 ஆண்டு கால போர்த்துக்கீசக் குடியேற்ற ஆட்சி ஆரம்பமானது.

1667 – காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1759 – பெய்ரூத், திமிஷ்கு நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30,000-40,000 பேர் உயிரிழந்தனர்.

1783 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 1783 பாரிசு உடன்படிக்கை: கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.

1795 – சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிசுலாசு ஆகத்து பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு உருசியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1905 – டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் “ஏழாம் ஆக்கோன்” என்ற பெயரில் நோர்வேயின் மன்னனாக முடிசூடினான்.

1917 – முதலாம் உலகப் போர்: செருமனியப் படை மொசாம்பிக், தன்சானியா எல்லையில் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தது.

1926 – ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்து பலர் காயமுற்றனர்.

1936 – சப்பானும், செருமனியும் சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ‘பர்காம் என்ற கப்பல் செருமனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.

1947 – நியூசிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது.

1950 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.

1960 – டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொசு இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.

1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1977 – பிலிப்பீன்சின் முன்னாள் மேலவை உறுப்பினர் பெனீனோ அக்கீனோவிற்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் பின்னர் 1983 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1981 – ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.

1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.

1992 – செக்கோசிலோவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக 1993 சனவரி 1 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.

1996 – அமெரிக்காவின் நடுப்பகுதியை பனிக்கட்டைச் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

2006 – சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

2008 – இலங்கையின் வடக்குப் பகுதியை நிசா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர், 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.