• Thu. Mar 28th, 2024

சீரக தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் பயன்கள்

Sep 29, 2021

சீரக தண்ணீர் குடிப்பதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளிடம் இருந்து உடலை பாதுகாக்கும். இதில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் நார் சத்துகள் உள்ளன.

நீரழிவு நோயாளிகள் தங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் இந்த நோயை குணப்படுத்த பலவிதமான மருந்துகளை எடுத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்து வந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைய செய்யும்.

சீரகம் உடலில் காணப்படும் பலவித நோய்களை சீர்ப்படுத்துகிறது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், காப்பர், மெக்னீசியம் போன்ற உயிர்ச்சத்துகள் உள்ளது. இவை உடலுக்கு தேவையான நன்மைகளை வழங்குகிறது.

அமிலத்தன்மை, குமட்டல், அஜீரண கோளாறுகள் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் சீரக தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி இது வயிறு வலியை குணமாக்கும்.

சோர்வாக இருக்கும் சூழலில் சீரக தண்ணீர் குடித்து வந்தால் மிகவும் நல்லது. இதனால், உடல் ஆற்றல் மேம்படும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

சில தாய்மார்களுக்கு குழந்தை பிறந்ததும் பால் மிக குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பால் சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க சீரக தண்ணீர் அருந்தலாம்.