
பொதுவாக இன்று பலரும் காரசாரமான உணவைதான் விரும்புகிறார்கள். நாவூறும் சுவையில் இருக்கும் இந்த உணவுகளுக்கு காரம் சேர்ப்பதில் முதன்மையானது சிவப்பு மிளகாய்தான்.
மிளகாய் தூள் இல்லாத குழம்பும் இந்திய சமையலில் இல்லை. இருப்பினும் காரம் சுவையை கொடுத்தாலும் அளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவும் ஆபத்துதான்.
அதிகமாக சிவப்பு மிளகாய் பொடியை பயன்படுத்துவதால் உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கி விடுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
அந்தவகையில் சிவப்பு மிளகாய் பொடியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி பார்ப்போம்.
- சிவப்பு மிளகாயை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற நோய்க்கு ஆளாக நேரிடும். இது தவிர சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
- மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும். வாயில் காரத்தால் வெப்பம் அதிகரிக்கிறது, அதனால் வாயில் எரிச்சல் அதன் தொடர்ச்சியாக புண்களும் ஏற்படலாம்.
- சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதே சமயம் காரமான உணவுகளை அதிக நேரம் சாப்பிடுபவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
- அதிக காரம் உடலின் நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
- சிவப்பு மிளகாய் பொடியை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, முன்கூட்டிய பிரசவத்தின் அபாயம் அதிகரிக்கிறது.
- அதுமட்டுமன்றி கர்ப்ப காலத்தில் சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது குழந்தைக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும்.
- சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் புண்களை ஏற்படுத்தும்.