குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய நுரையீரலை பாதித்து விடும்.
நுரையீரலில் அதிகப்படியான சளி சேர்வதன் மூலம் நமக்கு ஆரோக்கியா ரீதியாக அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும். நமக்குப் புரியும்படி சொல்லப்போனால் சிலருக்கு நெஞ்சு சளி பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள்.
இவர்களுக்கு எவ்வளவு மருந்து வாங்கி கொடுத்தாலும், மருந்தை சாப்பிடும்போது, அந்த இருமல் போய்விடும். மருந்தை நிப்பாட்டிய உடன் இருமலும் சளியும் மீண்டும் வந்து தொற்றிக் கொள்ளும். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தர தான், இந்த சுலபமான குறிப்பு.
கிராம்பு- 1, ஏலக்காய்- 1, மிளகு- 5 இவற்றுடன் இனிப்பு சுவையை சேர்க்க சிறிய துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – 1/2 ஸ்பூன்.
முதலில் இரண்டு வெற்றிலைகளிலும் காம்புப் பகுதியையும், நுனி பகுதியையும் நீக்கிவிட வேண்டும். கிராம்பு, ஏலக்காய், மிளகு, வெல்லம், இந்த நான்கு பொருட்களை வெற்றிலைக்குள் வைத்து சுருட்டி மடித்து வாய்க்குள் போட்டுக் கொள்ள வேண்டும். நன்றாக மென்று அதன் சாறை விழுங்கி மீதமிருப்பதை வெளியே துப்பி விடலாம்.
காலை, மாலை இரண்டு வேளையும் இப்படி வெற்றிலையை தயார் செய்து சாப்பிடலாம். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். 17 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஆக இருந்தால் ஒரு வெற்றிலையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வெற்றிலையை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்துவிடும். உங்கள் உடலில் இருக்கும் சளி மலம் மூலமாக வெளியேற்றப்படும். சளி பிரச்சனை மட்டுமல்ல, நம் உடலில் இருக்கக்கூடிய செரிமானத்தை சீர்படுத்த, குடலை சுத்தப்படுத்த, வாய்வுத்தொல்லை நீங்க, சைனஸ் சரியாக, நுரையீரலை சுத்தம் செய்ய, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும்.