• Fri. Jul 26th, 2024

முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்

Mar 23, 2022

பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் முட்டை அதிக சத்துக்களை தன்னுள் கொண்ட ஓர் உணவுப் பொருள் . இதில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது தவிர முட்டையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. இத்தகைய முட்டையை பல்வோறு சாப்பிடலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். ஆனால் முட்டையை எக்காரணம் கொண்டும் ஒரு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அந்த உணவுகள் எவையென்பதை இப்போது காண்போம்.

முட்டை இறைச்சி

முட்டை மற்றும் பன்றி இறைச்சி ஆகிய இரண்டுமே அதிக புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களைக் கொண்டவை. இவற்றை ஒன்றாக உண்ணும் போது எவ்வளவு விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறதோ, அதே வேகத்தில் உடல் ஆற்றலைக் குறைத்து, சோம்பேறியாக்கிவிடும். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் முட்டை ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது, அதில் உள்ள அமினோ அமிலங்கள் வெளியிடப்பட்டு, உடலில் மோசமான நஞ்சாகிறது. மேலும் இந்த உணவுக் கலவை இரத்த உறைதலுக்கும் வழிவகுக்கும். எனவே முட்டையை சர்க்கரையுடன் சேர்த்த எப்போதும் சாப்பிடாதீங்க.

முட்டை சோயாபால்

சோயா பால் மற்றும் முட்டை ஆகிய இரண்டையும் ஒன்றாக எடுக்க கூடாது. இது உடலில் புரோட்டீனை உறிஞ்சுவதில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கும். ஆகவே புரோட்டீன் நிறைந்த உணவுகள் இரண்டையும் எப்போதும் ஒன்றாக உட்கொள்ளாதீர்கள்.

முட்டை மற்றும் டீயை ஒரே நேரத்தில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இம்மாதிரியான உணவுச் சேர்க்கை மலச்சிக்கலை உண்டாக்குவதோடு, உடலுறுப்புக்களில் மோசமான சேதத்தை ஏற்படுத்தும்.

வாழைப்பழம் மற்றும் முட்டையை ஒன்றாக அடுத்தடுத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இம்மாதிரியான தவறை ஜிம் செல்பவர்கள் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால், அவர்கள் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.