• Sun. Dec 8th, 2024

தலை முடி ஆரோக்கியத்திற்கு சிறந்த தீர்வு இதோ!

Feb 3, 2022

அதில் அரிசி தண்ணீர் பயன்படுத்துவதால் கூந்தல் கருகருவென, நீளமாகவும், உறுதியாகவும் வளருகின்றது. அதனால்தான் ஜப்பான் மற்றும் சீனர்களின் முடி மென்மையாகவும், உறுதியாகவும் பளபளக்கிறது. அவர்கள் அடிக்கடி முடி ஆரோக்கியத்திற்கு அரிசி நீரை பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

அரிசி தண்ணீர் என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரிய வகைப் பொருள் அல்ல.

அதேசமயம் அதிக பணச்செலவும் இல்லை. தினமும் வீட்டில் சமைக்க அரிசி குறைந்தது அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்கள் ஊற வைப்போம்.

அந்த தண்ணீரை இனிக் கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள்.

இல்லையெனில் தலைக்குக் குளித்தபின் இறுதி நீராக இந்த அரிசி தண்ணீரை ஊற்றி அலசுங்கள்.

அதேபோல் இந்த ஊற வைத்த அரிசி நீரைப் புளிக்கச் செய்து அதில் கொஞ்சம் நீர் கலந்து தலைக்குத் தேய்த்தாலும் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.

நீங்கள் தலைக்குக் குளித்தபின் இறுதியாக இந்த தண்ணீரை ஒரு ஜக் தலையில் ஊற்றி அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

வேண்டுமென்றால் வாசனைக்கு அதில் வாசனை எண்ணெய் கலந்து கொள்ளலாம்.

குறிப்பாக உங்கள் கூந்தல் காற்று மாசுபாடு, தூசி, வெப்பத்தால் சேதமடைதல், பொடுகு, வறட்சி, அரிப்பு இப்படி எந்த வகையில் கூந்தல் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதைச் சரிசெய்துவிடும். கெமிக்கல்களில் இல்லாத மேஜிக் இந்த அரிசி தண்ணீரில் உண்டு.