காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் சூடான நீரை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பலருக்கு சுடு நீர் குடிப்பது பிடிக்காது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் தண்ணீரைக் குடிக்கும்போது ஒரே மாதிரியான தவறுகளை செய்கிறோம். இந்த தவறுகள் என்ன என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒருவர் நின்று கொண்டு தண்ணீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அது சில தீமைகளை ஏற்படுத்துகின்றது. ஆயுர்வேதத்தின்படி நீங்கள் நின்று தண்ணீரைக் குடிக்கும்போது தண்ணீரில் இருந்து ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. அவ்வாறு செய்யும் போது உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படும்.
உணவு சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் நீங்கள் சரியாக சாப்பிட முடியாது. அது உங்கள் வயிற்றை நிறைவாக உணர வைக்கிறது. நீங்கள் சரியாக சாப்பிடவில்லை என்றால் உங்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது. அது மட்டும் இல்லாமல் செரிமானத்தை சீர்குலைக்கிறது.
பல மக்கள் உடற்பயிற்சிகளுக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதில்லை. இது தலைவலியை ஏற்படுத்தும். ஒரு வொர்க்அவுட்டுக்கு அரை மணி நேரத்திற்கு முன் குறைந்தது 250 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும்.