• Sat. Apr 20th, 2024

பாதாம் பருப்பில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

Jan 3, 2022

பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்கள் உதவி செய்கின்றது. அதில் ஒன்று தான் பாதாம் பருப்பு. பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

எடை இழப்பு, நல்ல எலும்பு ஆரோக்கியம், உங்கள் மனநிலையை மேம்படுத்துதல், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான அபாயத்தைக் குறைத்தல், பல சுகாதார நன்மைகள பாதாம் பருப்பின் உள்ளன.

இருப்பினும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியமாகும். இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது என்று கூறப்படுகின்றது.

  • சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் கலோரியில் கட்டுப்பாட்டுடன் இருந்து, பாதாமை உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைத்து விடும்.
  • பாதாமில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் டயட்டில் பாதாமை சேர்ப்பதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
  • ஒரு சர்க்கரை நோயாளி சாதாரண அளவு கலோரிகளை எடுத்து வந்து, பாதாமையும் அன்றாடம் உட்கொண்டால், அது அவர்களது மொத்த கலோரியின் அளவை அதிகப்படுத்தி காட்டி விடும்.
  • எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க பாதாமை உட்கொள்வதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளை உண்பதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

எப்போது, எவ்வளவு சாப்பிடலாம்?

சாதாரணமாக ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிட்டு வரலாம். பாதாமை சர்க்கரை நோயாளிகள் அதிகாலை அல்லது மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வரலாம்.