• Fri. Mar 29th, 2024

மாதுளம் பழத்திலுள்ள மருத்துவ குணங்கள்

Sep 14, 2021

மாதுளம் பழம் பிராணவாயுவை கிரகிப்பை ரத்தத்தில் அதிகபடுத்துவதால் உடல் பலம் இல்லாதவர்கள், நோயாளிகள் மற்றும் சுறுசுறுப்புத்தன்மை இல்லாதவர்கள் இப்பழத்தை அதிகம் உண்டு வருவது சிறந்த பலன் அளிக்கும்.

புற்று நோய்க்கு மாதுளம் பழத்தை ஜூஸ் பிழிந்து அதனுடன் கற்கண்டுகளை சேர்த்து தினந்தோறும் காலையில் அருந்தும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். வேறு சில வகையான புற்று நோய்களை தடுக்க கூடிய சக்தியும் மாதுளம் பழத்திற்கு உண்டு.

மாதுளம் பழம் அல்லது சர்க்கரை அதிகம் கலக்காத மாதுளம் ஜூஸை தினமும் அருந்தி வந்தால் உடலில் நரம்புகள் பலம் பெற்று தாம்பத்திய சுகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ரத்தம் உடலில் ரத்தம் என்பது அனைத்து உடலுறுப்புகளும் தொடர்ந்து ஈடுபடுவதற்கு அவசியமானதாகும். உண்ணும் உணவு, அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றாலும் ரத்தத்தில் நச்சுகள் சேருகின்றது.

மாதுளம் பழம் அல்லது மாதுளம் ஜூஸ் அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் நச்சுகள் நீங்கும். ரத்தத்தில் சிகப்பணுக்களின் உற்பத்தியையும் மேம்படுத்தும். இதய நலம் மாதுளம் பழத்தில் கொழுப்பை கரைக்கும் சக்தி அதிகம் உண்டு.

இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தினந்தோறும் காலையில் மாதுளம் பழத்தை சாப்பிடுவது நல்லது. மாதுளம் பழம் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுத்து இதய பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

மாதுளம் பழத்தில் வைட்டமின் ஈ, வைட்ட மின் சி, வைட்டமின் கே போன்றவை சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தினமும் மாதுளம் பழம் சாப்பிட வேண்டும். மாதுளம் ஜூஸ் போட்டு சாப்பிட நினைப்பவர்கள் சர்க்கரையை சேர்க்காமல் பருகுவது நல்லது. மாதுளம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ஒரு பழமாகும்.