• Sat. Apr 20th, 2024

துளசியின் மருத்துவ குணங்கள்

Dec 29, 2021

பொதுவாக நாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்களை விட்டுவிட்டு செயற்கையான விஷயங்களை நாடுகிறோம். அந்த வகையில் துளசியில் பல மருத்துவ குணங்கள் மறைந்துள்ளது. குறிப்பாக இருமலுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு வருகின்றது.

துளசியை அப்படியே செடியில் இருந்து பறித்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மேலும், துளசியில் இருந்து நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும்.

தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் குணமாகும். தினமும் காலை, மாலை என இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை சாப்பிட்டால் கேன்சர் குணமாகும்.

துளசி ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உடலின் செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து நரம்புகளை வலுவாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வரலாம்.