• Tue. Dec 3rd, 2024

சின்ன வெங்காயத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

Jan 7, 2022

சின்ன வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் போன்றவை அதிகமாகவே உள்ளன. வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு காரணமாக தான் அதனை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீர் வருகிறது.

ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும். மேலும் சின்ன வெங்காயத்தை சமையலில் சேர்ப்பதால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..

  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது.
  • அதுபோல நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும். வெங்காயத்தில் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
  • நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
  • வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காய சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி குணமாகும்.