• Mon. Dec 9th, 2024

உடல் எடையைக் அதிகரிக்கவும் குறைக்கவும் ஒரே மருந்து!

Dec 24, 2021

தேனின் மூலம் முழுமையான பயனைப் பெறவதோடு, இளமையோடு நோய் இல்லாமல் கொழுப்பு உடலில் சேராமல் இருக்கலாம். உடல் எடையை அதிகரிக்கவும் குறைக்கவும் உதவும் ஒரே மருந்து தேன்.

உடல் எடையை குறைக்கும் அந்த மருந்து என்னவென்றால் ‘தேன்’ தான் அந்த மருந்து. உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து அதனுடன் சிறிது முருங்கை இலைகளை 10 கிராம் அளவு கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இதற்கு பத்தியம் என்னவென்றால் அசைவ உணவுகள், பால், சர்க்கரை, நெய் போன்றவைகளை சாப்பிட கூடாது.

தினமும் காலையில் இது போல் தேனும் முருங்கை இலையும் கலந்து காய்ச்சி வடிகட்டி குடித்துவந்தால் உடல் எடை உடனடியாக எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் குறையும். சில பெண்களுக்கு குழந்தை பெற்ற பின் வயிற்றில் ஏற்படும் தொப்பையை கூட இது குறைக்கும்.

உடல் எடை அதிகரிக்க விரும்பும் நபர்கள் இரவு படுக்கச்செல்லும் முன் 1 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் தேன் கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்க விரும்பும் நபர்களுக்கு பத்தியம் கிடையாது. அதோடு முருங்கை இலைகளை சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை. சுத்தமான தேன் மட்டும் போதும்.

சுத்தமான மலைத் தேன் நல்ல பலனை உடனடியாக கொடுக்கும். இம்மருந்தில் தேன்தான் முக்கியம் அதனால் நல்லதேனை உங்களுக்கு தெரிந்த இடத்தில் வாங்கிப் பயன்படுத்துங்கள்.